புத்தாண்டு வாழ்த்துக்கள் - இன்று முதல் - எனது புதுவருடத் தீர்மானம்
முதலில் எல்லோருக்கும் எனது உளம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
[caption id="" align="aligncenter" width="480"] புத்தாண்டு வாழ்த்துக்கள் - இன்று முதல் - புதுவருடத் தீர்மானம் [/caption]
இன்று முதல் - எனது புதுவருடத் தீர்மானம்
இடைவெளி விட்டு ஆடிக்கொருக்கா, ஆவணிக்கொருக்கா என்று பதிவதை விட்டு, விட்டு இனி மும்முரமாக பதிவுகளை எழுதவேண்டும் என்பதுதான் எனது இந்தப் புதுவருடத் தீர்மானம். ஒரு பிடி, பிடிப்பம் என்று தீர்மானிச் சிருக்கிறன். நான் விட்டாலும் உங்கடை பின்னோட்டங்கள் விடவிடாது என்றும் நம்புறன்.
சிறுவயதில் வீரகேசரி, தினகரன், தினபதி, ஈழநாடு பத்திரிகைகளில் கடைசிப்பக்கம் அல்லது அதற்கு முதற்பக்கத்தில் சினிமா விளம்பரங்களை ஆவலோடு எதிர்பார்ப்பதில் ஆரம்பித்த பழக்கம், இன்று நான் எழுதுவதை மற்றவர்களும் பார்க்கவேண்டுமே என்று ஏங்க வைக்கின்றது வரை வளர்ந்திருக்கிறது.
அன்று தினமும் அங்கும் இங்குமென வாசிகசாலைகளுக்கிடையே சைக்கிள் உழக்கி அலைந்த காலம்போய், இன்று இருந்த இடத்திலேயே, வலைமனைகளுக்கும், வலைப்பூக்களுக்கும் நுழுந்தி, நுழுந்திப்போய் தரிப்பதுவும், சொடுக்குவதுமாய் கழிகின்றது. ஆனால் இந்த மினைக்கெட்ட தேடலில் உள்ள அதீதமான ஆர்வம் மட்டும் அன்றுமுதல் இன்றுவரை என்றுமே குறைவதாகத் தெரியவில்லை.
இதனிடையே வாழ்வும் சில புலங்கள் பெயர்ந்திருக்கின்றது. இந்த மாற்றங்களிடையே எனக்கேற்பட்ட இரசனைமிக்க அனுபவங்களைத்தான் உங்களுடன் சாதாரணனின் வலைப்பதிவுகளில் இன்று முதல், வலு மும்முரமாக பகிரப்போகின்றேன்.
சரி புதுவருசத்திற்கு வந்தநீங்கள் ஒரு தேத்தண்ணி குடிச்சுப்போட்டுப் போறியளே?
நன்றி.
அன்புடன்
சாதாரணன்.
-நேரமிருக்கேக்கை பேந்தும் வாங்கோவன்-