ஒரு அர்த்தமுள்ள சின்ன ஜோக்:
எனக்கு email இல் வந்தவொரு நல்லதொரு ஜோக். அனுப்பிய கல்லூரி நண்பன் R.விஜயராமச்சந்திரனுக்கு நன்றிகள் உரித்தாகட்டும். உங்கள் பாராட்டுகளும் அவனுக்குத்தான்.
[caption id="attachment_138" align="aligncenter" width="320"] ஒரு அர்த்தமுள்ள சின்ன ஜோக்[/caption]
ஜோக்:
கடும் கோபத்தில் அந்த முதலாளி தனது ஊழியகர்ளிடம் கத்தினார்.
'நான்தான் இங்கு முதலாளி. நீங்கள் ஒன்றுமே இல்லை.
வெறும் பூஜ்யம். புரிகிறதா! இப்போது சொல்லுங்கள், நீங்கள் யார்?’
ஊழியர்கள் அமைதியாகப் பதில் அளித்தார்கள்: '... பூஜ்யம்!’
'அப்படியானால் நான் யார்?’ இது முதலாளியின் அடுத்த கேள்வி.
ஊழியர்கள் மீண்டும் அமைதியாக: 'பூஜ்யத்தின் முதலாளி’!
நீதி உங்களுக்குக் கீழ் இருப்பவர்களை மதிப்பானவர்களாக நியமித்து, மதிப்பானவர்கள் மதிப்பவராக உங்களை நீங்கள் தகுதிப் படுத்திக்கொள்ளுங்கள்!