விமானத்தில் இலத்திரனியல் கருவிகளை செயற்படுத்துவது மிகவும் ஆபத்தானது
விமானப்பயணத்தின் ஆரம்பத்தில் இலத்திரனியல் கருவிகளின் செயற்பாடுகளை முற்றிலுமாக நிறுத்திவிடுமாறு விடுக்கப்படும் அறிவித்தலை பலரும் இது ஒரு வழக்கமான விஷயம்தானே என்று கவனதில் கொள்ளுவதேயில்லை. ஆனால் சமீபத்தில் நடந்த விசாரணையொன்று விமானப்பயணத்தின்போது பயணிகளின் இலத்திரனியல் கருவிகள் இடையூறுகளை உண்டாக்குவதாகக் கண்டறிந்துள்ளார்கள்.
மேலும் இது சில விமான விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக 2003ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் நிகழ்ந்த எட்டுபேரை பலிகொண்ட விமான விபத்திற்கு மோபைல்போன் இனால் ஏற்பட்ட இடையூறுதான் காரணமென நம்பப்படுகிறது.
எனவே விமானப் பயணத்தின்போது இலத்திரனியல் கருவிகள் உபயோகிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிடுங்கள்.
இணைப்புக்கள்
http://www.nytimes.com/2011/01/18/business/18devices.html
http://www.heraldsun.com.au/ipad/high-tech-danger-in-the-air/story-fn6bfmgc-1225991279563