புலத்திலும் புகழுடன் திகழப்போகும் தமிழ்ப்படம்
கோடம்பாக்கத்தின் செட்டுக்களுக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு வீரவசனங்கள் பேசிய நம்ம ஹீரோக்கள், மதுரையின் சந்துபொந்துகளுக்குள் சேவல்களுடன் கதை பேசுமளவுக்கு இயக்குனர்களின் செல்லப்பிள்ளைகள் ஆகிவிட்டார்கள். புலத்திலும் தமிழ்படத்தின் சாயலிருந்து விலகி சொந்தக்கதையைப் பேசியிருக்கிறது 1999. (இது எனது சின்னச் சின்னச் செய்திகள் வலைப்பூவில் வந்ததொரு பதிவின் மீள்பதிவு.)
[caption id="attachment_325" align="aligncenter" width="450"] புலத்திலும் புகழுடன் திகழப்போகும் தமிழ்ப்படம்[/caption]
தமிழ்ப்படத்தின் பொற்காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அது மிகையல்ல உண்மை. ஹீரோக்கள் விம்பங்களை உடைத்து சாதாரணர்களாக இயக்குனர்களின் தயவில் வித்தியாசமான களங்களில் வாழத்தலைப்பட்டு விட்டார்கள். தொழில்நுட்பத்தினரும் சினிமாவின் எல்லாத் துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். தமிழ்படங்களுக்கு உலகத் திரைப்பட விழாக்களில் விருது என்பது ஆஸ்கார் உட்பட எட்டிய கனியாகிவிட்டது.
புலத்திலும் இதனை மெய்ப்பிக்கும் வண்ணம், சென்ற ஆண்டில் கனடாவில் வெளிவந்திருக்கும் படம்தான் 1999. இது பல உலகத் திரைப்பட விழாக்களிலும் பங்குகொண்டுள்ளதுடன் விருதுகளையும் பெற்றுள்ளது.
புலத்திலிருந்து இனிமேல் வரவிருக்கும் தமிழ்ப்படங்கள் உலகத் தரத்தையும் விஞ்சியிருக்கும் என்பதற்கு ஒரு நல்ல ஆரம்பம் 1999.
இணைப்புக்கள்
1.படத்தின் உத்தியோகபூர்வ வலைமனை
http://www.1999movie.com/
2.இயக்குனரின் youtube பக்கம்
www.youtube.com/user/leninmsivam
3.இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவு இயக்குனர்களின் பேட்டிகள்
பகுதி1 பகுதி2 பகுதி3 பகுதி4 பகுதி5
4. படத்தின் கதைப் பின்னணியை உள்ளடக்கிய நல்லதொரு விமர்சனம்