Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Thursday, October 17, 2013

தகவற்சித்திரம் - காட்டுத்தீயிலிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள்

சமீபகாலங்களில் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயானது கோடைகாலங்களில் பெருமளவு அழிவையேற்படுத்துகின்றது. உடமைகளை மட்டுமல்லாமல் உயிரழிவையும் ஏற்படுத்தும், இப்பேரழிவிலிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அறிந்துகொள்வது ஆஸ்திரேலிய மக்களுக்கு மிக,மிக அவசியமானதொன்று. அதற்கமைய‌ உங்களையும், உங்கள் உடமைகளையும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுவதற்கான வழிமுறைகளை, மிகவும் எளிமையாகவும், இலகுவாகவும் புரிந்துகொள்ள ஏதுவாக இத்தகவற்சித்திரம், அனிமேஷன் வழியாக சொல்லித்தருகின்றது. எனவே படத்தில் க்ளிக்கி (click) அனிமேஷன் தகவற்சித்திரத்தைப் பார்க்கவும்.

[caption id="attachment_413" align="aligncenter" width="530"]www.saatharanan.com-025-தகவற்சித்திரம் - காட்டுத்தீயிலிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள்  (Infographics) தகவற்சித்திரம் - காட்டுத்தீயிலிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள் (Infographics)[/caption]

Summary:Australian Bushfire Survival guides.

Source: www.heraldsun.com.au
நன்றி : www.ces.vic.gov.au

Thursday, June 6, 2013

இதற்கு முன் நிகழ்ந்திராத YouTube பவளப் பாறை நேரலை ஒளிபரப்பு

 

ஆஸ்திரேலியாவின் Queenland மாநிலத்திலுள்ள உலகின் இயற்கையான ஏழு அதியசயங்களில் ஒன்று என வர்ணிக்கப்படும் Great Barrier Reef, உலகின் அதிபெரிய பவளப்பாறையிலிருந்து YouTube பவளப் பாறை நேரலை ஒளிபரப்பை நீங்கள் இன்று இலங்கை இந்திய நேரப்படி அதிகாலை 5.30AM இலிருந்து மாலை 5.30PM வரை பன்னிரண்டு மணி நேரத்திற்கு நேரலையாக‌ கண்டுகளிக்கலாம்.

[caption id="attachment_558" align="aligncenter" width="500"]இதற்கு முன் நிகழ்ந்திராத YouTube பவளப் பாறை நேரலை ஒளிபரப்புwww.saatharanan.com-043  இதற்கு முன் நிகழ்ந்திராத YouTube பவளப் பாறை நேரலை ஒளிபரப்பு[/caption]

ஆண்டுதோறும் பல இலட்சக்கான மக்கள் உல்லாசப்பயணிகளாக வந்து கண்டுகளிக்கும் Great Barrier Reef வை நீங்களும் கண்டுகளிக்க இது ஒரு அரிய வாய்ப்பாகும். மேலும் இந்நேரத்தில் சுழியோடிகளுடன் twitter இல்
#reeflive வழியாக தொடர்பும் கொள்ளலாம்.


மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இணைய இணைப்புக்களைப் பார்க்கவும்.

http://www.youtube.com/user/queensland/reeflive

http://www.cnbc.com/id/100791294

http://www.youtube.com/queensland

http://en.wikipedia.org/wiki/Great_Barrier_Reef

Friday, April 12, 2013

தகவற்சித்திரம் (Infographics) - தகைமைத் திரட்டு (Resume)

தகவற்சித்திரம் (Infographics) - தகைமைத் திரட்டு (Resume)


நீங்கள் உங்களிடமுள்ள திறமைகளை பட்டியலிட்டு நிரல்படுத்தி தகைமைத் திரட்டு (Resume)உருவாக்கி வைப்பதென்பது இன்றியமையாதது. நீங்கள் வேலைதேடும்பொழுதும், மேலும் வேலையில் பதவியுயர்வைப் பெற்றுக்கொள்வதற்கும், நல்ல வேலைமாற்றம் பெற்றுக்கொள்வதற்கும், சமயத்தில் இரண்டாவது வேலை பெற்றுக்கொள்வதற்கும் தகைமைத் திரட்டு (Resume)உதவுகின்றது. உங்களில் பலரும் இதனை எழுத்து வடிவம் (Text) மூலம் உருவாக்கி வைத்திருப்பீர்கள். இங்கு நீங்கள் காணப்போவது தகவற்சித்திர (Infographics) வடிவத்தினாலான ஒரு தகைமைத் திரட்டு (Resume).இதனை உருவாக்கியவர் தன்னுடைய திறமைகளை, அழகாக தன் அவயவங்கள் ஒவ்வொன்றுக்கும் உள்ள திறமைகளாக நிரல் படுத்தியுள்ளார். இனி தகவற்சித்திரத்தைப் பார்ப்போம்.

 

[caption id="attachment_530" align="aligncenter" width="662"]தகவற்சித்திரம் (Infographics) - தகைமைத் திரட்டு (Resume) www.saatharanan.com-040 தகவற்சித்திரம் (Infographics) - தகைமைத் திரட்டு (Resume)[/caption]

இத்தகவற்சித்திரம் மிகவும் பெரியது. எனவே தகவற்சித்திரத்தில் க்ளிக்கி (click) ஓப்பன் (open) பண்ணிப் பார்க்கவும்.

இதனைப் பார்க்கும் உங்களிற்கும் இதுபோன்ற தகவற்சித்திர (Infographics) வடிவத்தினாலான ஒரு தகைமைத் திரட்டு (Resume) ஒன்றை உருவாக்கும் எண்ணம் தோன்றலாம். பின்வரும் இணைப்புக்களில் சென்று முயற்சிக்கவும்.

மிகவும் பிரபல்யமான தகவற்சித்திரம் உருவாக்கும் கருவி (Infographics Tool)
http://visual.ly/

எவ்வாறு தகவற்சித்திரத்தை உருவாக்கலாம் என்பதை இவ்விணைப்பில் படங்களுடன் இங்கு காணலாம்.
http://vector.tutsplus.com/tutorials/designing/how-to-create-outstanding-modern-infographics/

பலமாதிரி வடிவங்களிலான தகவற்சித்திர தகைமைத் திரட்டுக்களை (Sample Infographics Resumes) இங்கு காணலாம்.
http://pinterest.com/rtkrum/infographic-visual-resumes/

Summary:

This infographics article have information about how can create a resume in inforgraphics form. Also you can see a sample Infographics resume and you can see some links for Infographics tool.

Source: www.careymercier.com
நன்றி :www.careymercier.com

அன்புடன்

சாதாரணன்.

Friday, March 8, 2013

தகவற்சித்திரம் (Infographics) - சிறுவணிகத்தில் (Small Business) சமூக ஊடகங்களின் (Social Media) பயன்பாடு

சிறுவணிகங்கள் (Small Business) சமூக ஊடகங்களைப் (Social Media)பயன்படுத்தி எவ்வாறு வாடிக்கையாளர்களுடன் தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்றும், அதன் மூலம் வணிகத்தை பெருக்கிக் கொள்ளக்கூடிய வழிமுறைகளையும் வெகுசுருக்கமாக சொல்லுகின்றது இத்தகவற்சித்திரம்.

[caption id="attachment_504" align="aligncenter" width="342"]தகவற்சித்திரம் (Infographics) - சிறுவணிகத்தில் (Small Business) சமூக ஊடகங்களின் (Social Media) பயன்பாடுwww.saatharanan.com-035.png தகவற்சித்திரம் (Infographics) - சிறுவணிகத்தில் (Small Business) சமூக ஊடகங்களின் (Social Media) பயன்பாடு[/caption]

பிரபலமான முன்னிலை சமூகஊடகங்களான ட்விட்டர், முகநூல், யூடியுப், கூகிள்+, ட்டம்பிளர், ட்டிக் (Twitter, Facebook, YouTube, Google+, Tumbler, Digg) ஆகியவற்றின் பயன்பாடுகளை ஒப்பிட்டு ஆராய்வதோடு நின்றுவிடாது, அவற்றில் உங்கள் கணக்குகளை ( User Account) ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட நடைமுறைகளையும் கற்றுத்தருகின்றது இத்தகவற்சித்திரம். இனி மிச்சத்தை தகவற்சித்திரம் சொல்லும்.

இத்தகவற்சித்திரம் மிகவும் பெரியது. எனவே தகவற்சித்திரத்தில் க்ளிக்கி (click) பெரிதாக்கிப் பார்க்கவும்.

 

Summary:

This infographic of small business social media cheat sheet explains, how small business can, build up their customer base by using the social media. Also It is compare the pros, cons of major social media sites, such as Twitter, Facebook, YouTube, Google+, Tumbler, and Digg.

Source: Flowtown
நன்றி : Flowtown

அன்புடன்
சாதாரணன்.

Saturday, January 19, 2013

தகவற்சித்திரம் - காட்டுத்தீயிலிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள்

சமீபகாலங்களில் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயானது கோடைகாலங்களில் பெருமளவு அழிவையேற்படுத்துகின்றது. உடமைகளை மட்டுமல்லாமல் உயிரழிவையும் ஏற்படுத்தும், இப்பேரழிவிலிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அறிந்துகொள்வது ஆஸ்திரேலிய மக்களுக்கு மிக,மிக அவசியமானதொன்று. அதற்கமைய‌ உங்களையும், உங்கள் உடமைகளையும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுவதற்கான வழிமுறைகளை, மிகவும் எளிமையாகவும், இலகுவாகவும் புரிந்துகொள்ள ஏதுவாக இத்தகவற்சித்திரம், அனிமேஷன் வழியாக சொல்லித்தருகின்றது. எனவே படத்தில் க்ளிக்கி (click) அனிமேஷன் தகவற்சித்திரத்தைப் பார்க்கவும்.

[caption id="attachment_413" align="aligncenter" width="530"]www.saatharanan.com-025-தகவற்சித்திரம் - காட்டுத்தீயிலிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள்  (Infographics) தகவற்சித்திரம் - காட்டுத்தீயிலிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள் (Infographics)[/caption]

இத்துடன் ஒரு தகவல் இணைப்பும் பிடிஎவ் (pdf) பைல்லாக உள்ளது. ஓப்பன் பண்ணிப் பார்க்கவும்

http://www.ces.vic.gov.au/__data/assets/pdf_file/0019/152452/99-144.pdf

Summary:Australian Bushfire Survival guides.

Source: www.heraldsun.com.au
நன்றி : www.ces.vic.gov.au

Friday, January 4, 2013

சோம்பேறி என்று கவலைப்படுகிறீர்களா?

சோம்பேறி என்று கவலைப்படுகிறீர்களா?


கவலையை விடுங்கள்! உங்கள் சோம்பலுக்கு காரணமான ஜீனையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டார்கள். நீங்கள் உறக்கத்திலிருந்து விழிப்பதற்கு சிரமப்படுவதற்கு காரணமான இந்த ஜீனேதான் ஒரு முழுநாளுக்குமான உங்கள் உறக்க - விழிப்பு வட்டத்தின் ஒழுங்கமைப்பைத் (sleep cycle rhythms) தீர்மானிக்கின்றது.

ஒரு பழப்பூச்சியை மையமாகக்கொண்டு  அமெரிக்காவிலுள்ள Northwestern University இல் Dr. Ravi Allada  தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் நடாத்திய பரிசோதனைகளின் முடிவுகளின் இது கண்டறியப்பட்டுள்ளது. இது மனிதனுக்கும் பொருந்தக் கூடியதாகுமெனவும் கூறியுள்ளார்கள்.

இணைப்புக்கள்

செய்தி
http://www.thirdage.com/news/sleep-cycle-rhythms-regulated-genes_2-17-2011

விளக்கமான விபரங்கள்
http://www.innovations-report.com/html/reports/studies/waking_hard_170292.html

முழுமைமையான பரிசோதனை முடிவுகள் (சந்தா தேவை)
http://www.nature.com/nature/journal/v470/n7334/full/nature09728.html

Saturday, December 29, 2012

தகவற்சித்திரங்கள் Infographics

தகவற்சித்திரங்கள் Infographics


Infographics என ஆங்கிலத்தில் கூறப்படும் தகவற்சித்திரங்கள் இணையமெங்கும் பரவிக் கிடக்கின்றன. நீங்களும் பலவற்றை பார்த்திருப்பீர்கள். நான் கண்ட சுவாரசியமான தகவற்சித்திரங்களை அவ்வப்போது உங்களுடன் இப்பக்கத்தில் பகிர்ந்துகொள்ளலாம் என்றிருக்கின்றேன்.

தகவற்சித்திரம் - சிறுவிளக்கம்


பக்கம், பக்கமாக எழுதி ஒரு கட்டுரையில் சொல்லவேண்டிய தகவல்களை எளிதாக ஒரு தகவற்சித்திரத்தில் வடிவமைத்துவிடலாம். இன்னும் சொல்லப்போனால் குறும்தகவல்கள், வரைபடங்கள், சித்திரங்களென செறிவுமிக்க தகவல்களை உள்ளடக்கிய ஒரு தகவற்சித்திரத்தை சிறப்பாக வடிவமைப்பதன் மூலம் சொல்லவேண்டிய விடயத்தை இலகுவாகவும், எளிதாகவும் வாசகர்களுக்கு புரிய வைத்துவிடலாம்.
இனி இன்றைய  தகவற்சித்திரத்தைப் பார்ப்போம்.

தகவற்சித்திரங்களை பற்றி விளக்கம் தரும் தகவற்சித்திரத்தை இன்று பார்ப்போம்.

தகவற்சித்திரங்களின் சரித்திரத்தைக் கூறும் தகவற்சித்திரம்.




[caption id="attachment_101" align="aligncenter" width="580"]தகவற்சித்திரங்கள் Infographics தகவற்சித்திரங்கள் Infographics[/caption]

Source : www.abccopywriting.com

Summary : Infographics is graphic visual representations of information, data or knowledge.

Friday, December 28, 2012

வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்.

வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்


நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளக தாவரங்களை வளர்ப்பவரா? உங்களுக்கு ஓர் நற்செய்தி!  உள்ளக தாவரங்கள் வீட்டினுள்ளேயுள்ள காற்றை சுத்திகரித்து சுகாதாரத்தையளிப்பதாக நாஸா நிறுவனத்தினர் நடத்திய ஆய்வொன்றின் முடிவு தெரிவித்துள்ளது.

[caption id="attachment_219" align="aligncenter" width="450"]வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள் வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்[/caption]

144 சதுர அடி கொண்ட அறையில் வைக்கப்படும் ஒரு தாவரமானது அந்த அறையிலுள்ள 90% வீதமான காற்றைச் சுத்திகரிக்கின்றது எனவும், இதனால் வீட்டிலுள்ளோரின் சுவாசம் சம்பந்தப்பட்ட சிக்கல்களும், மற்றும் தலையிடி போன்ற நோய்கள் வரும் சந்தர்ப்பங்கள் குறைவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பின்வரும் இணைப்புக்களில் எந்த வகையான தாவரங்கள் சிறந்தன என்ற விபரங்கள் உள்ளன.

http://scienceray.com/biology/ecology/keep-the-air-clean-in-your-home/

http://www.utne.com/Environment/NASA-sanctioned-houseplants-purify-indoor-air.aspx

Saturday, October 6, 2012

மழலைகளின் உணவில் அதிக கவனம் கட்டாயமாகத் தேவை

மழலைகள் இலகுவாக தங்களுக்கு பிடித்தமான சுவையுடய உணவுகளை அடையாளம் கண்டுவிடுகிறார்களெனவும், அத்துடன் மழலைகள் அதீதமான கொழுப்பு, உப்பு, இனிப்பு கொண்ட தீனிகளையே விரும்புவதாகவும் அமெரிக்காவில் அண்மையில் மழலைகளையும், பெற்றோர்களையும் உள்ளடக்கி நிகழ்ந்த பரிசோதனைகளுடன் கூடிய ஆய்வொன்றின் முடிவொன்று தெரிவித்துள்ளது.

மழலைகள் இலகுவாக தங்களுக்கு பிடித்தமான சுவையுடய உணவுகளை அடையாளம் கண்டுவிடுகிறார்களெனவும், அத்துடன் மழலைகள் அதீதமான

கொழுப்பு, உப்பு, இனிப்பு கொண்ட தீனிகளையே விரும்புவதாகவும் அமெரிக்காவில் அண்மையில் மழலைகளையும், பெற்றோர்களையும் உள்ளடக்கி நிகழ்ந்த பரிசோதனைகளுடன் கூடிய ஆய்வொன்றின் முடிவொன்று தெரிவித்துள்ளது.

இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் மிகுந்த கவலையளிப்பதாக இருந்தாலும் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்ததிலிருந்தே பெற்றோர்கள் குழந்தைகளின்

உடல் நலத்திற்கேற்புடைய உணவுப் பதார்த்தங்களை அதிக அக்கறையுடன் கொடுக்கவேண்டுமென வலியுறுத்துகின்றது.

இணைப்புக்கள்

சுருக்கமாக ஆய்வின் விபரங்கள்

http://www.laboratoryequipment.com/News-kids-fall-for-sugary-fatty-brands-012811.aspx

சில தீர்வுகள்

http://www.i-newswire.com/preschoolers-need-to-be-taught/86534

 

தாய்ப்பால் வங்கிகள்

சேமிப்பு வங்கி, முதலீட்டு வங்கி, கடன் வங்கிகளென கேள்விப்பட்ட நாங்கள் தாய்ப்பால் வங்கியைப்பற்றி அறிந்திருக்கிறோமா? கடந்த சில ஆண்டுகளாக இவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்டு பலநாடுகளில் இயங்கி வருகின்றன. இந்தியாவில் மும்பையில் இயங்கி வருகின்றது. வேறு இடங்களிலும் இயங்குவது தெரிந்தால் சொல்லுங்கள்.

[caption id="attachment_84" align="aligncenter" width="396"]Saatharan Blog : The Mothers’ Milk Bank The Mothers’ Milk Bank[/caption]

"ஒரு பச்சிளம் குழந்தை தன் சொந்தத்தாயிடம் பாலை பெற்றுக் கொள்ளுவதில் சிரமங்கள் இருந்தால், மாற்றாக வெறொரு தாயிடமிருந்து பெற்றுக்கொள்வதுதான் சிறந்தது. இதற்கு உறுதியளிக்கும் விதத்தில், பாதுகாப்பான வழிமுறைகளையும், தொடர்ச்சியான வழங்கல்களையும் தன்னகத்தேகொண்டு, தாய்ப்பால் வங்கிகள் பச்சிளம் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக தாய்ப்பாலை வழங்குமெனில், அவை இதைச்  செய்யலாம்." என்ற உலக சுகாதார நிறுவனத்தினரின் பரிந்துரைக்கமைய தாய்ப்பால் வங்கிகள் உலகில் செயற்பட்டு வருகின்றன.

தாய்ப்பால் வங்கிகள், நடைமுறையில் இடதுக்கிடம் கொண்டு செல்லுதல், சேமித்து வைத்தல், பதனிடுதல் போன்ற செயற்பாடுகளில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும் பயன்பாட்டளவில் பெருவெற்றிகளை சாதித்து வருகின்றன. பின்னே! திடகாத்திரமான புதிய சந்ததியினரை உருவாக்கும் வங்கிகளல்லவா?

பின்வரும் இணைப்புக்களில் மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

http://www.nationalmilkbank.org/content.php?content_id=1002

http://mothersmilkbank.com.au/home/

http://www.breastfeedingindia.com/breastfeeding/human_milk_banks.html

http://www.ukamb.org/index.html

Monday, October 1, 2012

சமர்ப்பணம்!!

சமர்ப்பணம்!!


சின்ன வயதிலே பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டு இரவினிலே ஒழுங்கையினூடாகத் தனியாகத் திரும்பி வருகையில் பேய்க்குப் பயத்திலே கண்ணை மூடிக்கொண்டு ஓடிவருவதுண்டு.

ஆனாலும் பயத்தையும்மீறி இடையிலே கண்விழித்து பார்த்து,அந்த இருட்டினில் பன்னைப் பத்தைகளுக்கிடையே மினுங்கும் மின்மினிப்பூச்சிகளின் அழகினை இரசித்து மனம் இலயித்து நின்று விடும் என்னை பெடியனைக் காணவில்லையே என்று கூப்பிடும் குரல்தான் அசைக்கும்.

இந்த இரசனையின் தொடர்ச்சி எனது உடல், உள, வளர்ச்சிகளோடு சேர்ந்தும், சேராமலும் மாறுபட்டு வெண்திரை, சின்னதிரை என நீட்சிபெற்று இன்று கணணித்திரையில் கண்பதிக்க வைத்துவிட்டது.

அதிசயம் என்னவென்றால் இவ்வித இரசனைகளையும்,அதிலிருந்து வேறுபட்ட மற்ற ஊடகங்களின் இரசனைகளையும், கலந்து ஏக மொத்தமாக பல்லூடகக் கணணியிலே கண்டும், கேட்டும், கூடவே மற்றைய புலன்களின் உணர்வுகளோடும் பரிணமித்து இரசிக்க முடிகின்றது. என்ன கொஞ்சம் அக்கறையோடு தேடவேண்டும். இப்படிப்பட்ட தேடல்களை எனது உணர்வுகளுடன் கலந்து உங்களுடன் பகிருமொரு வலைப்பூவே இந்த சாதாரணனின் வலைப்பதிவுகள்.

[caption id="attachment_245" align="aligncenter" width="450"]விஞ்ஞானிகளுக்கு இவ்வலைப்பூ சமர்ப்பணம் விஞ்ஞானிகளுக்கு இவ்வலைப்பூ சமர்ப்பணம்[/caption]

அத்துடன் மின்சாரம், தொலைபேசி,வானொலி, சினிமா, தொலைக்காட்சி, கணணி, வலையம், வலைபூக்கள், மடிக்கணணி, செல்பேசி, குறுணி, உக்குறுணிக்கணணி ....... என தொடர்ச்சியாக விரிந்து கொண்டே செல்லும் இத்தொழில்நுட்பங்களை தங்களின் நேரத்தை பொருட்படுத்தாத கடின உழைப்பினூடாக, சாமான்யர்களுக்கும் எளிதாக பயன்படுத்தும்படி சாத்தியமாக்கிய அத்தனை விஞ்ஞானிகளுக்கும் இவ்வலைப்பூ சமர்ப்பணம்.

அன்புடன்
சாதாரணன்.