இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2019) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தைச் சேர்ந்தவரான Dr Richard Harris OAM அவர்களும், மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தைச் சேர்ந்தவரான Dr Craig Challen SC OAM அவர்களும் இணைந்து பெற்றுக் கொள்கின்றனர்.
மிகச் சிறந்த முக்குளிப்பு வீரர்களான இவர்கள் இருவரும் கடந்த வருடம் (2018) யூலையில் தாய்லாந்தில் 12 சிறுவர்கள் கொண்ட உதைபந்தாட்டக் குழுவொன்று அவர்களது பயிற்றுவிப்பாளரோடு சுமார் 10 கி.மீ. நீளமுள்ள, சிக்கலான குகை அமைப்பு ஒன்றுக்கு சாகசப் பயணம் மேற்கொண்டபோது, குகையினுள் ஏற்பட்ட திடீர் மழைவெள்ளத்தால் குகையிலிருந்து வெளிவரமுடியாமல் சிக்கிக் கொண்ட பொழுது, அவர்களை மீட்டெடுத்த சர்வதேச குழுவில் இணைந்து ஆற்றிய தீரமிக்க வீரப் பணிக்காக இந்த விருதைப் பெற்றுக் கொள்கின்றனர்.
இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமமக்களிற்கு ஆஸ்திரேலிய தினத்தையொட்டி வருடம் தோறும் வழங்கப்படும் ஆஸ்திரேலியாவின் அதியுயர்வான விருதாகும்.
தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும் நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.
எல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.
அன்புடன்
சாதாரணன்
இப்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணைப்புக்களில் ஆங்கிலத்தில் காணலாம்.
ஆஸ்திரேலியா தினவிபரங்கள்
ஆஸ்திரேலியா தின விருதுகள் பற்றிய விபரங்கள்
இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும் Dr Richard Harris OAM அவர்களின் விபரங்கள்
இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும் Dr Craig Challen SC OAM அவர்களின் விபரங்கள்
No comments:
Post a Comment