ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!
இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2015) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, Victoria (VIC) மாநிலத்தை சேர்ந்தவரும், குடும்ப வன்முறைக்கு (Domestic Violence) எதிராக உத்வேகமாக செயற்படுபவருமான குடும்ப வன்முறை விழிப்புணர்வு ஆர்வலர் (Domestic violence campaigner), Rosie Batty அவர்கள் பெற்றுக்கொள்கின்றார். இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமகனொருவருக்கு ஆஸ்திரேலிய தினத்தையொட்டி வருடம் தோறும் வழங்கப்படும் ஆஸ்திரேலியாவின் அதியுயர்வான விருதாகும்.
[caption id="attachment_753" align="aligncenter" width="620"] Australian of the year 2015, Rosie Batty[/caption]
தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும் நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.
எல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.
அன்புடன்
சாதாரணன்
இப்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணைப்புக்களில் ஆங்கிலத்தில் காணலாம்.
ஆஸ்திரேலியா தினவிபரங்கள்
http://www.australiaday.org.au/
ஆஸ்திரேலியா தின விருதுகள் பற்றிய விபரங்கள்
http://www.australianoftheyear.org.au/
இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும் Rosie Batty அவர்களின் விபரங்கள்
http://en.wikipedia.org/wiki/Rosie_Batty
Rosie Batty அவர்கள் இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெற்றுக்கொண்டபோது ஆற்றிய ஆங்கில உரையின் முழுவரிவடிவத்தை இப்பக்கத்தில் காணலாம்.
http://www.theaustralian.com.au/in-depth/australia-day/australian-of-the-year-2015-rosie-battys-speech-text-pays-tribute-to-son/story-fnrjbzgk-1227196361078
No comments:
Post a Comment