அதிங், இதிங் உபாலி எஸ்.செல்வசேகரன் - கோமாளிகளின் கும்மாளம் - சில நினைவுகள்
அமரர் உபாலி எஸ்.செல்வசேகரனின் மறைவினை முன்னிறுத்திச் சில நினைவுகள்
அப்ப யாழ்ப்பாணத்திலை டிவி இல்லை,மினிபஸ் கூட வராத காலம். இதிலை போனா சங்கடம் என்ற இ.போ.ச வசுவிலைபோய் யாழ்ப்பாணம் டவுனிலை படம் பாக்குறத்துக்குள்ளை தவிலறுந்போயிடும். தினசரிப் பொழுதுபோக்கிற்கு, றேடியொவே கதியென்று இருந்த காலகட்டம். அதுவும் கர், புர் சத்தத்தோடைதான் ஒலிக்கும்.
[caption id="attachment_227" align="aligncenter" width="300"] அமரர் உபாலி எஸ்.செல்வசேகரன்[/caption]
அந்த நேரத்திலை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பின்னேரம் நாலு மணியிலையிருந்து நாலரை மணிவரை றேடியோவிலை கோமாளிகளின் கும்மாளம் என்ற இலங்கை மக்கள் வங்கியின் விளம்பர நிகழ்ச்சி மூலம் எங்களை குதூகலத்தில் ஆழ்த்தியவர்கள் தான் இந்தக்கோமாளிகள்.
நிகழ்ச்சி அத்தானே, அத்தானே என்று தொடங்கும் மக்கள் வங்கியின் விளம்பர டைட்டில் சோங்குடன் ஆரம்பிக்கும். பாட்டு அந்த நாட்களில் எங்களுக்கு மனப்பாடம்.
அதைத் தொடர்ந்து இலங்கை வானொலி அறிவிப்பாளர்களில் தனக்கென பிரத்தியேக குரலைக்கொண்டிருந்த கவிஞர் சில்லையூர் செல்வராஜனின்
"இதோ உங்களைக் குதூகலத்தில் ஆழ்த்த வருகிறார்கள் உங்கள் கோமாளிகள்" என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து வரும் கோமாளிகளான, மரிக்கார் ராமதாஸ், அப்புக்குட்டி ராஜகோபால், உபாலி எஸ்.செல்வசேகரன், ஐயர் அப்துல் ஹமீட் என்று இவை நாலுபேரும் சேர்ந்து அடிக்கிற கூத்திலை சிரிச்சு, சிரிச்சு வயிறு புண்ணாப்போயிடும்.
இணப்புக்கள்
தமிழ் விக்கிபீடியாவில் இவரைப் பற்றிய தகவல்கள்.
http://ta.wikipedia.org/s/19hh
அமரர் உபாலி எஸ்.செல்வசேகரனின் பேட்டியோடு கூடியுள்ள தகவல்கள்.
http://www.thinakaran.lk/vaaramanjari/2010/04/11/?fn=f1004117&p=1
மரணங்கள் என்றுமே கவலையைத்தருவன. அதிலும் எங்களை கவலைகளை மறந்து சிரிக்க வைத்தவர்களின் மரணங்கள் கூடிய சோகத்தையே தரும்.
அமரர் உபாலி எஸ்.செல்வசேகரனின் ஆத்மா சாந்தியடையட்டும்.
அன்புடன்
சாதாரணன்.
No comments:
Post a Comment