சேமிப்பு வங்கி, முதலீட்டு வங்கி, கடன் வங்கிகளென கேள்விப்பட்ட நாங்கள் தாய்ப்பால் வங்கியைப்பற்றி அறிந்திருக்கிறோமா? கடந்த சில ஆண்டுகளாக இவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்டு பலநாடுகளில் இயங்கி வருகின்றன. இந்தியாவில் மும்பையில் இயங்கி வருகின்றது. வேறு இடங்களிலும் இயங்குவது தெரிந்தால் சொல்லுங்கள்.
[caption id="attachment_84" align="aligncenter" width="396"] The Mothers’ Milk Bank[/caption]
"ஒரு பச்சிளம் குழந்தை தன் சொந்தத்தாயிடம் பாலை பெற்றுக் கொள்ளுவதில் சிரமங்கள் இருந்தால், மாற்றாக வெறொரு தாயிடமிருந்து பெற்றுக்கொள்வதுதான் சிறந்தது. இதற்கு உறுதியளிக்கும் விதத்தில், பாதுகாப்பான வழிமுறைகளையும், தொடர்ச்சியான வழங்கல்களையும் தன்னகத்தேகொண்டு, தாய்ப்பால் வங்கிகள் பச்சிளம் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக தாய்ப்பாலை வழங்குமெனில், அவை இதைச் செய்யலாம்." என்ற உலக சுகாதார நிறுவனத்தினரின் பரிந்துரைக்கமைய தாய்ப்பால் வங்கிகள் உலகில் செயற்பட்டு வருகின்றன.
தாய்ப்பால் வங்கிகள், நடைமுறையில் இடதுக்கிடம் கொண்டு செல்லுதல், சேமித்து வைத்தல், பதனிடுதல் போன்ற செயற்பாடுகளில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும் பயன்பாட்டளவில் பெருவெற்றிகளை சாதித்து வருகின்றன. பின்னே! திடகாத்திரமான புதிய சந்ததியினரை உருவாக்கும் வங்கிகளல்லவா?
பின்வரும் இணைப்புக்களில் மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
http://www.nationalmilkbank.org/content.php?content_id=1002
http://mothersmilkbank.com.au/home/
http://www.breastfeedingindia.com/breastfeeding/human_milk_banks.html
http://www.ukamb.org/index.html
No comments:
Post a Comment