சமர்ப்பணம்!!
சின்ன வயதிலே பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டு இரவினிலே ஒழுங்கையினூடாகத் தனியாகத் திரும்பி வருகையில் பேய்க்குப் பயத்திலே கண்ணை மூடிக்கொண்டு ஓடிவருவதுண்டு.
ஆனாலும் பயத்தையும்மீறி இடையிலே கண்விழித்து பார்த்து,அந்த இருட்டினில் பன்னைப் பத்தைகளுக்கிடையே மினுங்கும் மின்மினிப்பூச்சிகளின் அழகினை இரசித்து மனம் இலயித்து நின்று விடும் என்னை பெடியனைக் காணவில்லையே என்று கூப்பிடும் குரல்தான் அசைக்கும்.
இந்த இரசனையின் தொடர்ச்சி எனது உடல், உள, வளர்ச்சிகளோடு சேர்ந்தும், சேராமலும் மாறுபட்டு வெண்திரை, சின்னதிரை என நீட்சிபெற்று இன்று கணணித்திரையில் கண்பதிக்க வைத்துவிட்டது.
அதிசயம் என்னவென்றால் இவ்வித இரசனைகளையும்,அதிலிருந்து வேறுபட்ட மற்ற ஊடகங்களின் இரசனைகளையும், கலந்து ஏக மொத்தமாக பல்லூடகக் கணணியிலே கண்டும், கேட்டும், கூடவே மற்றைய புலன்களின் உணர்வுகளோடும் பரிணமித்து இரசிக்க முடிகின்றது. என்ன கொஞ்சம் அக்கறையோடு தேடவேண்டும். இப்படிப்பட்ட தேடல்களை எனது உணர்வுகளுடன் கலந்து உங்களுடன் பகிருமொரு வலைப்பூவே இந்த சாதாரணனின் வலைப்பதிவுகள்.
[caption id="attachment_245" align="aligncenter" width="450"] விஞ்ஞானிகளுக்கு இவ்வலைப்பூ சமர்ப்பணம்[/caption]
அத்துடன் மின்சாரம், தொலைபேசி,வானொலி, சினிமா, தொலைக்காட்சி, கணணி, வலையம், வலைபூக்கள், மடிக்கணணி, செல்பேசி, குறுணி, உக்குறுணிக்கணணி ....... என தொடர்ச்சியாக விரிந்து கொண்டே செல்லும் இத்தொழில்நுட்பங்களை தங்களின் நேரத்தை பொருட்படுத்தாத கடின உழைப்பினூடாக, சாமான்யர்களுக்கும் எளிதாக பயன்படுத்தும்படி சாத்தியமாக்கிய அத்தனை விஞ்ஞானிகளுக்கும் இவ்வலைப்பூ சமர்ப்பணம்.
அன்புடன்
சாதாரணன்.
[...] சத்தியமா, நான் இராசாத்தி அன்ரிக்கும்... [...]
ReplyDelete